"₹1 கோடி நிவாரணம் என சொல்லிவிட்டு வெறும் ₹5 லட்சம் கொடுப்பது ஏன்?" - ஸ்டாலினை விளாசும் செல்லூர் ராஜு!

Update: 2021-06-11 06:15 GMT

"ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க சொன்ன ஸ்டாலின் இப்போது 5 லட்சம் கொடுப்பது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது, "கொரோனாவால் தற்போதும் அசாதாரண சூழ்நிலை தான் உள்ளது. தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வமாக இருந்தாலும், எப்போது தடுப்பூசி கிடைக்கும் என ஆட்சியர்களுக்கும் தெரியவில்லை. மக்களுக்கும் தெரியவில்லை. மக்களை அலையவிடுவது கண்டனத்துக்குரியது. தடுப்பூசி குறித்த சரியான அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடவில்லை.

கொரோனோவால் இறந்தவர்களுக்கு பிரதமர் பத்து லட்சம் அறிவித்தார். முதல்வர் ஐந்து லட்சம் அறிவிக்கிறார். ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என சொன்னவர் ஸ்டாலின். ஆனால், தற்போது கொரோனாவால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் அளிக்க மறுக்கின்றனர். என் தொகுதியிலேயே நிறைய பேருக்கு இறப்புச் சான்றிதழ் கொடுக்கவில்லை. கொரோனாவால் இறப்பவர்களுக்கு காரணம் போட முடியாது என கூறப்படுகிறது. பிறகு எப்படி அந்த நோயால் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.

Similar News