13.30 லட்சம் செலவு செய்துவிட்டு 3 கோடி நிதி ஒதுக்கியதாக காட்டும் தி.முக அரசு - அம்பலமாகும் உண்மைகள்

Update: 2022-03-10 09:30 GMT

உக்ரேனில் சிக்கிய அரசு இந்திய மாணவர்களை மீட்பதற்காக மூன்று கோடி ரூபாய் ஒதுக்கியதாக தி.மு.க கணக்கு காட்டும் நேரத்தில் இதுவரை 13,30,000 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.


ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக போர் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது இந்த போரின் போது உக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை காப்பாற்ற இந்திய அரசு "ஆபரேஷன் கங்கா" என்ற மீட்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 4'ஆம் தேதி ரூமானியா எல்லையில் இருந்து 35 இந்திய மாணவர்களை அழைத்து வர தமிழக அரசு நிதி உதவி செய்ததாக தி.மு.க தரப்பு தெரிவித்தது, இந்நிலையில் அந்த செய்தியை பகிர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தலைமை ஆலோசகர் கஞ்சன் குப்தா இந்த செய்தி உண்மையில்லை என கூறியிருந்தார்.


ஆனால் மறுபுறம் தமிழக ஊடகங்களும், தி.மு.க சார்பில் சமூக வலைத்தள கணக்குகளும் நாங்கள் செலவு செய்தோம் 3 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கி உள்ளோம் என்கிற ரீதியிலான செய்திகளை பரப்பி வந்ததனர், இந்நிலையில் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூமானிய எல்லையில் இருந்து 35 மாணவர்களைக் காப்பாற்ற தலா 38,000 வீதம் 35 பேருக்கு போக்குவரத்து செலவை தமிழக அரசு ஏற்றதாக தெரியவந்துள்ளது, ஆனால் தமிழக அரசு ஒதுக்கிய நிதியை மூன்று கோடி ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடதக்கது.


மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசுதான் மேற்கொண்டு வருகிறது, ஆனால் 35 மாணவர்களுக்கு தலா 38,000 செலவு செய்துவிட்டு மாணவர்களை தாங்கள்தான் மீட்டதாக தி.மு.க அரசு தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதிலும் மூன்று கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது கேள்விக்குறியாகியுள்ளது? இந்நிலையில் நேற்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த மூன்று கோடியை குறித்து விமர்சிக்கும் போது தமிழக எம்.பி'க்கள் டெல்லி போய் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு வரவே இந்த மூன்று கோடி என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source - Maalai malar

Similar News