1990'களில் காஷ்மீரில் அழிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்து கோவில்களை மீட்க எழும் குரல்கள்

Update: 2022-03-24 13:00 GMT

1990'களில் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டு அளிக்கப்பட்ட 200'க்கும் மேற்பட்ட கோவில்களை மீட்க காஷ்மீர் இந்துக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.


ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் காஷ்மீரி இந்துக்கள் 1990'களில் சமூகத்திற்கு எதிரான வன்முறையின் பொழுது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அப்பொழுது 200'க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன இன்னமும் அந்த கோவில்களில் செயல்படாமல் மோசமான நிலையில் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.


பிரபல இதழான டைம்ஸ் நவ் அறிக்கையின்படி காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியர்களின் வன்முறை மற்றும் வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1990'களில் அதிகம், மேலும் இந்து கோவில்கள் அதிகம் சேதப்படுத்தப்பட்டன இதனை மறுசீரமைப்பு செய்வதற்காக கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார்கள் காஷ்மீர் இந்துக்கள். 2012'ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்தில் ஒமர் அப்துல்லா அரசாங்கம் அறிவித்தபடி பள்ளத்தாக்கில் உள்ள 437 கோவில்கள் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளன என்று அரசாங்கப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஸ்ரீநகரில் மட்டும் 57 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன ஆனந்த்நாக் மாவட்டத்தில் 56 கோவில்கள் சேதத்தை சந்தித்துள்ள என்றும் இன்னும் பல கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இதனை செய்யத் தவறியதால் தற்பொழுது இந்த கோவில்களை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். டைம்ஸ் இதழுக்கு காஷ்மீர் பண்டிட் ஒருவர் கூறுகையில், "பள்ளத்தாக்கில் எங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க தற்போது அரசாங்கம் உட்பட அனைத்து அமைப்புகளும் முயன்று இதனை செய்து கொடுத்தால் எங்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வாக கிடைக்கும், நமது மதத் தலங்கள் பாதுகாப்பாக புரனமைக்கப்படும்! நமது மத தலங்கள் மற்றும் கோவில்களின் பாதுகாப்பு உறுதியாகும்" என தெரிவித்தார்.


இனப்படுகொலையின் போது இந்து கோவில்கள் பெரிய அளவில் சேதப் படுத்தப்பட்டது காஷ்மீர் நகரத்தின் இருண்ட காலம் ஆகும். 1992'ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் உள்ள ரகுநாத் மந்திர் உட்பட இந்து கோவில்களின் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. சேதப்படுத்துதல், தீ வைத்தல் மற்றும் சூறையாடுதல் ஆகியவற்றை பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நிறைவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்த பிறகு இப்பொழுது யூனியன் பிரதேசத்தில் உடைந்து கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோவில்களை மீண்டும் திறக்க பா.ஜ.க திட்டம் தீட்டியுள்ளது.



Source - Opindia.com

Similar News