20 சதவீத உள்ஒதுக்கீடு! தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்!

20 சதவீத உள்ஒதுக்கீடு! தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்!

Update: 2021-01-29 18:17 GMT

அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களின் இடஒதுக்கீட்டிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றார். ஆனால் தற்போதுவரை கிடைக்கவில்லை.

இதனிடையே ராமதாஸ் பல்வேறு வகையான போராட்டங்களையும் அறிவித்து அதனை நடத்தியும் வருகின்றார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பாக பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதே சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். அதே போன்ற மற்ற மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. பாமகவினரின் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Similar News