2026 இல் இது நிச்சயம் நடக்கும்,மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்!உடைத்து பேசிய அண்ணாமலை!

Update: 2025-02-14 16:07 GMT

1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிறகு அந்நிகழ்ச்சியில் பேசியவர் திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் ஓராண்டு காலம் தான் உள்ளது ஒரு விஷயத்தை சொன்னால் அதனை பாஜக செய்யும் என்பது மக்கள் அனைவருக்குமே தெரியும் தமிழக அரசியலிலும் நிச்சயம் மாற்றம் வரும் 


1998 இல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை யாரும் மறக்க மாட்டார்கள் இந்த சம்பவத்திலிருந்து கடந்த 28 ஆண்டுகளாக விடுதலை இல்லாமல் உள்ளது தவறான ஒரு அரசு ஆட்சியில் அமர்ந்தால் என்ன நடக்கும் என்பதை 28 ஆண்டுகளாக தெரியப்படுத்தி கொண்டுள்ளோம் மே 21 ஆம் தேதி பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் அந்த நாளில் பயங்கரவாதத்திற்கு எதிராக சத்தியம் எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது ஆனால் இதனை திமுக அரசு செய்யவில்லை இங்கிருக்கும் அரசியல்வாதிகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு முழக்கத்தை முன் வைத்தாலும் அவர்களின் வாக்கு வங்கி குறைந்து விடும் என்றுதான் நினைக்கிறார்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த இறுமாப்போடு 200 150 170 வாங்குவோம் என சொல்லிக் கொண்டு வருகிறார் ஆனால் 2026 இல் திமுக தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படும் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் இதில் மாற்றுக்கருத்தே இல்லை கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையே முதல்வர் கேஸ் வெடிப்பு சம்பவம் என கூறுகிறார் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது முதல்வரும் தொடர்ச்சியாக சிலிண்டர் விபத்து என கூறிக் கொண்டிருக்க நியாயம் எப்படி கிடைக்கும் அரசியல் காரணத்திற்காக நியாயப்படுத்துகிறார் என பேசியுள்ளார் 

Tags:    

Similar News