2G வழக்கின் தீர்ப்பு வரும் 30ம் தேதிக்குள் வரும் என தகவல் - கனிமொழியை கை கழுவ தி.மு.க திட்டமா?

2G வழக்கின் தீர்ப்பு வரும் 30ம் தேதிக்குள் வரும் என தகவல் - கனிமொழியை கை கழுவ தி.மு.க திட்டமா?

Update: 2020-11-01 15:18 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலை மையப்படுத்திய அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில் மற்றொரு முக்கிய வழக்கும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அது கனிமொழி மற்றும் ஆ.ராசா மீதான 2G ஊழல் வழக்கு.

2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க எம்.பி-க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 டிசம்பரில் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. டெல்லி உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்குகளைக் கடந்த ஆண்டு தினசரி விசாரணை அடிப்படையில் விசாரிக்கத் தொடங்கியது. ஆனால், கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழலால், இது தடைப்பட்டிருந்தது.

தற்பொழுது இந்த வழக்கின் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி வரும் நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கிறார். அதற்கு முன்பாக இந்த வழக்கை முடிக்க கடந்த அக்டோபர் 5'ம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படும் அதே சமயம் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக அமலாக்கத்துறையால் குற்றம் சுமத்தப்படும் கனிமொழியை தி.மு.க கண்டுகொள்ளாமல் இருப்பதால் கனிமொழி தரப்பு கடும் அப்செட் என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கனிமொழியை ஓரம்கட்டிவிட்டு உதயநிதியை முன்னிருந்தும் நோக்கில் ஸ்டாலின் குடும்பம் வேலைகளை செய்து வரும் நிலையில் கனிமொழிக்கு பாதகமாப தீர்ப்பு வரும் பட்சத்தில் இது ஸ்டாலினின் குடும்பத்திற்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் மிக அதிகம்.

எனவே இந்த வழக்கு விவகாரத்தில் சம்பிரதாய விசாரிப்புகள் கூட தி.மு.க தலைமையிடம் இருந்து கனிமொழிக்கு வரவில்லையாம். மாறாக தேர்தல் வரும் வேளையில் இந்த வழக்கு தீர்ப்பு வருவதை முதல்வர் கனவில் இருக்கும் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுக்கு பாராமாகவே கனிமொழியை பார்ப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி கனிமொழி குற்றவாளி என தீர்ப்பு வரும் பட்சத்தில் தி.மு.க தரப்பு கனிமொழியை கை கழுவிவிடவும் யோசித்து வருவதாக சில அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News