கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதி! தி.மு.க.வுக்கு 200 சீட்! இறுதி முடிவெடுத்த ஐபேக்!

கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதி! தி.மு.க.வுக்கு 200 சீட்! இறுதி முடிவெடுத்த ஐபேக்!

Update: 2021-01-19 13:57 GMT

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்யும் பணிகளில் தி.மு.க., ஈடுபட்டுள்ளது.

தி.மு.க.வின் இறுதி பட்டியல் தற்போது கசியத் தொடங்கியுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் மற்றும் மு.க.ஸ்டாலின் இருவரும் சேர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதி மட்டுமே இறுதி செய்துள்ளனர்.

ஐபேக் சொல்வதை ஸ்டாலின் கவனமுடன் கேட்டு வருகிறார். தி.மு.க.வில் உள்ள மூத்த நிர்வாகிகள் சொல்வதை கூட ஸ்டாலின் கேட்பதில்லையாம். பிரசாந்த் கிஷோர் சொல்வதை மட்டுமே தற்போது கேட்டு வருகிறாராம் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. 200 தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என முடிவாகியுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 34 தொகுதிகளை இறுதி செய்துள்ளனர். அதில் காங்கிரசுக்கு 11, ம.தி.மு.க.வுக்கு 5, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4, வி.சி.கவுக்கு 2, இரண்டு முஸ்லீம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், ஜ.ஜே.கே., பார்வர்ட் பிளாக், டி.வி.கே., கே.எம்.டி.கேவுக்கு தலா 1 தொகுதிகளும் என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்த தொகுதிகளை விட மிகவும் குறைவான இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தல் வரை இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அதிமுகவை தேடியும் போக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News