50 ஆயிரம் பெந்தகோஸ்தே திருச்சபை மக்கள் தி.மு.க பின்னால் உள்ளனர் - கிருஸ்தவ பாதிரியார் ஆணவ பேச்சு

Update: 2022-01-14 09:30 GMT

"தமிழகத்தில் 50 ஆயிரம் திருச்சபைகள் இருக்கின்றன, அதில் 60 லட்சம் மக்கள் இருக்கிறார்கள் எனவே வரும் தேர்தல்களில் வெற்றி பெற பெந்தகோஸ்தே திருச்சபை மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்" என தி.மு.க'விற்கு செய்தி சொல்லி ஊக்கமளிக்கும் விதமாக கிருஸ்துவ மத பாதிரியார் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைராலாகி வருகிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, ஒரு புறம் ஆளும் அரசு மீது தி.மு.க விதைத்த வெறுப்பு விதை, மறுபுறம் கூட்டணி கட்சியான பா.ஜ.க உள்ளே வந்துவிடும் என்ற கோஷம், மறுபுறம் நாங்கள் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்ற வேஷம், மறுபுறம் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தது, போதாக்குறைக்கு பிரஷாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் என பல வழிகளை கையாண்டு தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வரானார். இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு கிருஸ்துவ கூட்டங்களில் வெளிப்படையாகவே தி.மு.க'விற்கு நாங்கள் கை கொடுத்ததால்தான் வெற்றி பெற்றது என பாதிரியார்களே பேசி வருகின்றனர். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஒரு படி மேலே போய் தி.மு.க வெற்றி பெற்றது நாங்கள் இட்ட பிச்சை என பேசினார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு தி.மு.க சரி என்பது போல் அமைதி காத்து வந்தது.


இந்நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் பெந்தகோஸ்தே சமுதாய கிருஸ்துவ பாதிரியார் கூறுயதாவது, "தேசத்திலே ஒரு ராஜா வருவான், அவன் நலிவடைந்த சிறுபான்மை மக்களுக்கு உதவிகள் செய்து பாழடைந்த ஜெப ஆலயத்தை கட்ட உதவுவான் அவன் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல் மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களே நீங்கள்தான் நீங்கள்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர், நீங்கள்தான் தேவனால் எழுப்பப்பட்ட கோரேசு ராஜா, கிருஸ்துவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ஆண்டவரே உங்களை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பெந்தகோஸ்தே திருச்சபை மாமன்றங்கள் 50 ஆயிரம் இருக்கின்றன, அதில் 60 லட்சம் மக்கள் இருக்கிறார்கள், எனவே வரவுள்ள நகராட்சி, பேரூராட்சி நீங்கள் வெற்றி பெற திருச்சபை மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் உங்கள் ஆட்சி தொடர பெந்தகஸ்தே திருச்சபை மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள்" என கூறியுள்ளார்.


Source - Asianet NEWS

Similar News