எத்தனை சீட் கொடுத்தாலும் பரவாயில்லை.. இரட்டை இலையில் நிற்கிறோம்.. ஏ.சி.சண்முகம்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

Update: 2021-03-01 13:11 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனிடையே பாஜகவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


 



இதனை தொடர்ந்து தேமுதிகவிடம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தேமுதிக சார்பில் 23 தொகுதிகள் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.


 



இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் புதிய நீதிக் கட்சி நிறுவனர், ஏ.சி.சண்முகம் குறைந்தது 6 தொகுதிகளை வழங்குமாறு அதிமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். அப்படி ஒரு சில தொகுதிகளை குறைத்து கொடுத்தாலும் தாங்கள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News