பொதுச்செயலாளர் யார்.. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் இன்று ஆலோசனை.!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் என்று மாற்றப்பட்டது.

Update: 2021-07-22 06:08 GMT

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் என்று மாற்றப்பட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் அதிமுக உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனவும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது அவசியம் என பேசப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் யார் பொதுச்செயலாளர் என்று விவாதிக்கபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News