ஸ்டாலின் விளம்பர பலகையை அகற்ற அ.தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் புகார்.!

தேர்தல் நடத்தை விதிகளை மீறி திமுக ஸ்டாலின் பெயர் பலகைகள் வைத்திருப்பதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-10 11:35 GMT

தேர்தல் நடத்தை விதிகளை மீறி திமுக ஸ்டாலின் பெயர் பலகைகள் வைத்திருப்பதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது என தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்பட்டது.


 



அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது, பரிசு பொருள் வழங்கக் கூடாது, அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளர்களின் விளம்பரங்களோ சுவர்களில் இடம்பெறக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், திமுக ஸ்டாலின் படத்துடன் பெயர் பலகைகளை தமிழகம் முழுவதும் அக்கட்சி விநியோகம் செய்துள்ளது. இவை அனைத்தும் நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற வலியுறுத்தி அதிமுக நிர்வாகி இன்பதுரை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News