காலதாமதமாக தொடங்கப்பட்ட அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., பங்கேற்பு.!

காலதாமதமாக தொடங்கப்பட்ட அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., பங்கேற்பு.!

Update: 2021-01-09 11:53 GMT

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் பங்கேற்பு. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபம் செல்லும் வழி முழுவதும் அதிமுகவின் கொடி மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் இரண்டு பக்கங்களிலும் தொண்டர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர்களுக்கு கையைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காலையில் 8.50 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 2 மணிநேரம் தாமதமாக கூட்டம் தொடங்கியுள்ளது. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் தர வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் அதிமுக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது. மேலும், வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரங்கள், பணிகள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வரையறுக்கப் பட வாய்ப்புள்ளது.

அதேபோன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெறுவர் என தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

Similar News