உதயநிதி சட்டையில் தி.மு.க.வின் சின்னம்: தகுதி நீக்கம் செய்ய அ.தி.மு.க. கோரிக்கை.!

எனவே விதிமீறலில் ஈடுபட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குத் தொடுப்பதோடு, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2021-04-06 11:53 GMT

சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்களிக்கும் போது, அவங்களுடைய கட்சியின் சின்னமான உதயசூரியன் படம் பொறிக்கப்பட்ட சட்டையுடன் சென்று வாக்களித்தது, தேர்தல் விதிமுறை மீறல் என்று அதிமுக புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்துள்ள புகார் மனுவில், "மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் உதயநிதி ஸ்டாலின் அக்கட்சியின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளராகவும் போட்டியிடுகிறார். அப்போது அவர் வாக்குச்சாவடி செல்லும்போது, உதயநிதி ஸ்டாலின் சட்டையில் உதயசூரியன் படம் பொறித்த சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.

தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர் 48 மணி நேர பரப்புரை தடையை மீறிய இச்செயல், வாக்களிக்க வரும் பொதுமக்களை திசை திருப்பும் விதமாகவும், மனநிலையை மாற்றுகின்ற விதமாக அமையும் செயல். மேலும், இந்த விதிமீறலானது தேர்தல் நடத்தை விதிமுறையின்படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றமாகும்.

எனவே விதிமீறலில் ஈடுபட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குத் தொடுப்பதோடு, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News