அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்.. துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி பேச்சு.!

அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்.. துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி பேச்சு.!

Update: 2020-11-21 17:37 GMT

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


உள்துறை அமைச்சர் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி திறம்பட பணியாற்றி வருகின்றனர். இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தினமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.


மேலும், அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்றும் குறிப்பிட்டார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News