சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி.. சட்டத்திற்கு புறம்பானது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.!

சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி.. சட்டத்திற்கு புறம்பானது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.!

Update: 2021-01-31 12:50 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில அடைக்கப்பட்டிருந்தார். அவர் விடுதலை செய்யும் சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விடுதலை சான்றை மருத்துவமனையிலேயே சிறை நிர்வாகம் வழங்கியது.

இதனிடையே தற்போது சசிகலாவின் உடல்நிலை சீரானதால் அவர் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் செல்லும் காரில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. இந்த கொடியை பயன்படுத்தியது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த கொடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களுக்கு அளித்துள்ள பேட்டியில், அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. கட்சியில் இல்லாத ஒருவர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது என கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Similar News