முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. அமைச்சர் ஜெயகுமார்.!

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. அமைச்சர் ஜெயகுமார்.!

Update: 2020-12-28 16:41 GMT

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்து வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் கூட்டணிகள் உறுதி செய்யப்படும் அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அந்த வகையில் தற்போது பல பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைத்த கூட்டணி நீடிப்பதாக தெரிவித்தார். மேலும், கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த பின்னர்தான் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் கட்சியின் பொதுக்கூட்டம் என கூறினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகள் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால்தான் அவர்களுடன் கூட்டணி என தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் களம், சூடுபிடிக்க தொடங்கியுள்ளதும் பல்வேறு கட்சியினர் கூட்டணி பற்றி பேச ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News