பாமகவினர் போராட்டம் எதிரொலி.. முதலமைச்சருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு..!

பாமகவினர் போராட்டம் எதிரொலி.. முதலமைச்சருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு..!

Update: 2020-12-01 14:51 GMT

சென்னையில் இன்று வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி இன்று பாமகவினர் அனைவரையும் போராட்டத்திற்கு சென்னைக்கு வர அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்ற தொண்டர்கள் பல ஆயிரம் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் சென்னைக்கு அருகே பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.


அதனையும் மீறி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அரசு பேருந்துகளில் ஏறி போராட்ட இடத்திற்கு செல்லத்துவங்கினர். இதனால் போலீசாருக்கு பெரும் சவாலாக மாறியது.


இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அன்புமணி இன்று முதலமைச்சரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் என்ன மாதிரியான முடிவுகள் எட்டும் என்று இதுவரை தெரியவில்லை. இன்று மாலைதான் முடிவு தெரியவரும் என்று தெரிகிறது.

Similar News