சம்பா பயிர் எது குறுவை பயிர் எது ?தெரியுமா ராகுல் காந்தி அவர்களே!-அமித்ஷா கேள்வி!

எது சம்பா பயிர் எது குறுவை பயிர் என்று ராகுல் காந்திக்கு தெரியுமா? ஓட்டு வாங்குவதற்காக பேசுகின்ற ராகுல் காந்திக்கு அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-09-29 11:40 GMT

அரியானா மாநில சட்டசபை தேர்தல் ஐந்தாம் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்குள்ள ரேவரி என்ற இடத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி பேசினால் ஓட்டு கிடைக்கும் என்று சில தொண்டு நிறுவனங்கள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் சொல்லி இருக்கின்றன. அதனால் அவர் எம் .எஸ். பி பற்றி பேசுகிறார். அவருக்கு எம்.எஸ்.பி என்பதற்கு விரிவாக்கம் தெரியுமா? சம்பா பயிர் எது குறுவைப் பயிர் எது என்று தெரியுமா? குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் 24 விளை பொருள்களை அரியானா மாநில பா.ஜ.க அரசு கொள்முதல் செய்துள்ளது. வேறு எந்த காங்கிரஸ் அரசாவது இத்தனை விளைபொருட்களை கொள்முதல் செய்துள்ளதா? அதை அரியானா காங்கிரஸ் தலைவர்கள் சொல்லத் தயாரா?

கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகள் எத்தனை விளை பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்தன?.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1,300 ஆக இருந்தது. தற்போது 2,300 ஆக உள்ளது. மீண்டும்  பாஜக ஆட்சிக்கு வந்தால் நெல்லை குவிண்டாலுக்கு 3,100 என்ற விலையில் வாங்குவோம். காங்கிரஸ் அரசுகள் கமிஷன், லஞ்சம் ஊழல் என்ற அடிப்படையில் செயல்படுகின்றன.வர்த்தகர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர்தான் அரசை நடத்துவார்கள். ஆனால் பா.ஜ.க அரசில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News