வெளியுறவுத்துறை என்றால், இங்க மாதிரி ஸ்டிக்கர் ஒட்டும் வேலைன்னு நினைச்சீங்களா? ஊடகங்கள் முன்னிலையில் பொளந்து கட்டிய அண்ணாமலை!

Update: 2022-03-05 01:30 GMT

உக்ரைன் நாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்க சர்வதேச நாடுகளிடம் பேசி, மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது போன்ற போர் சூழலில், வெளிநாட்டில் சிக்கியவர்களை மீட்கும் முழு அதிகாரமும் மத்திய அரசிடமே உள்ளது. இதற்கிடையில், அரசியல் லாபத்திற்காக தி.மு.க அரசு 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இது பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர் அளித்த விளக்கம், இதற்கு மேல் கேள்வியே கேட்க தேவையில்லை என்கிற அளவுக்கு இருந்தது. 

"ஆபரேஷன் கங்கா" திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு போர் விமானங்கள் முதற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. வளர்ந்த நாடுகளே ரஷ்ய தாக்குதல் நடத்தும் பகுதிகளை நெருங்க திணறி வருகின்றன. தங்களது குடிமக்களை மீட்க சிரமத்தை எதிர்கொள்கின்றன. இந்த சூழலில் இந்தியாவின் மீட்பு பணியை பார்த்து, மற்ற நாடுகளும் பாராட்டி வருகின்றன. 

பாகிஸ்தான், துருக்கி நாட்டினர் கூட இந்திய கொடியை காட்டி உக்ரைனிலிருந்து தப்பித்த காட்சிகளை பார்த்துள்ளோம். அந்த அளவுக்கு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ள சூழலில், மத்திய அரசின் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு குழு அமைத்துள்ளது. 

அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ன விளக்கம் கொடுத்துள்ளார் என்பதை பின்வரும் வீடியோவில் காணலாம். 


Similar News