தொண்டர்கள் சந்திப்பு நிறைவு.. இன்று மாநில பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்கிறார் அண்ணாமலை.!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்கிறார்.;
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இதனால் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் அவர் வகித்து வந்த பாஜக தலைவர் பதவி அண்ணாமலைக்கு வழங்கி கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து கோவையில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.
இதனால் யாத்திரை போன்று அண்ணாமலை பல்வேறு மாவடங்களில் பயணம் செய்துவிட்டு நேற்று சென்னை வந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று சென்னை, தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முன்னாள் பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொள்கின்றனர்.