தேர்தல் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் வங்கி அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனையை காண்காணிப்பது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் அம்மாட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-03-10 10:48 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனையை காண்காணிப்பது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் அம்மாட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா ஆலோசனை நடத்தினார்.

நீலிகிரியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் பண புழக்கத்தை கண்காணிக்க 27 குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு வரும்போது, வங்கி ஊழியர்கள் உரிய ஆவணங்களை உடன் வைத்திருப்பது அவசியம்.

அதே நேரத்தில் தினமும் ஏடிஎம்மில் இருந்து 20 ஆயிரம் ரூபாயும், வங்கியிலிருந்து 40 ஆயிரத்துக்கு மேலாக எடுக்கும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Similar News