பீகார் தேர்தல் களம் : தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மகாகட்டபந்தன் கூட்டணிக்கும் கடும் போட்டி.!

பீகார் தேர்தல் களம் : தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மகாகட்டபந்தன் கூட்டணிக்கும் கடும் போட்டி.!

Update: 2020-11-10 09:47 GMT

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பீகார் மாநிலத்தின் தேர்தல் நடந்து முடிந்தது. மூன்று கட்டங்களாக 235 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. முதல் கட்டம் 28 அக்டோபர் அன்று 71 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டம் நவம்பர் 3 அன்று 93 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டம் நவம்பர் 7 அன்று 78 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் ஜனதா தள் (ஐக்கிய), மகாகட்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகள் மோதுகின்றன. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மகாகட்பந்தன் கூட்டணி 110 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 100 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். மிக குறைவான இடங்கள் வித்தியாசம் உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

Similar News