தேர்தலை முன்னிட்டு கோவா'வில் பைக் டாக்ஸி'யில் செல்லும் நாடகத்தை ராகுல் நடத்தியுள்ளார்.
கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மம்தா இப்பொழுதே காங்கிரஸ் கட்சியை குறை சொல்ல துவங்கிவிட்டார். அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியோ இந்த மாநிலமாவது 'கை' க்கு சிக்குமா என படுத்துக்கொண்டே கனவு காண்கிறது.
இந்நிலையில் கோவாவில் தேர்தல் பணிகள் தொடங்கியபிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு பாம்போலிம் பகுதியில் இருந்து பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்திற்கு பைக் டாக்சியில் பயணம் மேற்கொண்டு தேர்தல் நாடகத்தை துவக்கியுள்ளார்.