பா.ஜ.க., என்றுமே ‘நண்பன்டா’.. அமைச்சர் செல்லூர் ராஜு கலகல..!

பா.ஜ.க., என்றுமே ‘நண்பன்டா’.. அமைச்சர் செல்லூர் ராஜு கலகல..!

Update: 2021-01-01 19:10 GMT

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய, தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலம் தரும் திட்டங்களை அதிமுக அரசு செய்துள்ளது. ஆகவே வருகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் எல்லாம் நிலைத்து நிற்காது. கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து கொண்டிருக்கிறார், 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார், அதன் பின்னர் பிக்பாஸ் படப்பிடிப்பிற்கு சென்றுவிடுவார்.

அடுத்தது படம் தயாராக இருக்கிறது அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சென்று விடுவார். ஆனால் அரசியலுக்கு அரசியலில் மக்களின் எதிர்பார்ப்பை செய்து கொடுக்க எங்களை போன்ற அரசியல்வாதிகள் இருக்கிறோம். ஆகவே கமல் போன்றவர்களுக்கு அரசியல் லாயக்கி இல்லை.

உலக நாயகன் அவரால் நடிக்க மட்டுமே முடியும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டத்திலேயே அதிமுக வெற்றிக்கு பாஜக பாறை போல ஆதரவு கொடுக்கும் என கூறி விட்டு திமுகவை கிழி கிழி என கிழித்தார்கள். பிரதமர், அமித்ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த அனைவரின் ஆதரவையும் பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.

அதிமுக, பாஜக கூட்டணி நிலைத்து நிற்கும். அரசியல் காரணங்களுக்காக முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை பேச்சு எழுந்து வருகிறது. பாஜக, அ.தி.மு.க.விற்கு என்றைக்கும் நண்பேண்டா என்று சைடு கேப்ல பஞ்ச் டயலாக் பேசியது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அதிமுக நிர்வாகிகளும் கலகலவென சிரித்தனர்.
 

Similar News