அறுபடை வீடுகளிலும் பலம் பெரும் பா.ஜ.க., பழனியில் வேல் யாத்திரைக்கு திரண்ட பிரம்மாண்ட கூட்டம்..!

அறுபடை வீடுகளிலும் பலம் பெரும் பா.ஜ.க., பழனியில் வேல் யாத்திரைக்கு திரண்ட பிரம்மாண்ட கூட்டம்..!

Update: 2020-11-24 18:00 GMT

தமிழ் கடவுள் முருகப்பெருமானையும் கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையிலும், ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் தி.மு.க, தி.க உள்ளிட்ட இயக்கங்களை கண்டித்தும் தமிழக பா.ஜ.க சார்பில் வெற்றிவேல் யாத்திரை அறிவிக்கப்பட்டது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடைபெறும் என்று பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார். 

தமிழக அரசு தடையை மீறி கடந்த 6-ந் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கினார். தடையை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், பா.ஜ.க நடத்தும் கூட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்தது.

தடையை பொருட்படுத்தாமல் பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பா.ஜ.க தலைவர்கள் கைது செய்யப்படுவதும் பின்பு விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வெற்றிவேல் யாத்திரை நேற்று நடந்தது. மாநில தலைவர் எல். முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அப்போது அங்கு திரண்ட காவிப்படையின் பலத்தை பார்த்து எதிர்க்கட்சி வட்டாரங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. அறுபடை வீடுகளிலும் பா.ஜ.க-விற்கு பலம் அதிகரித்து வருவது நிதர்சனம். 

பா.ஜ.க மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசுகையில், பழனி சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.  

Similar News