கத்தோலிக்க திருச்சபைத் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு - 'லவ் ஜிகாத்' விவகாரம் விவாதிக்கப்பட்டதா?

கத்தோலிக்க திருச்சபைத் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு - 'லவ் ஜிகாத்' விவகாரம் விவாதிக்கப்பட்டதா?

Update: 2021-01-20 10:09 GMT

சிரோ மலபார் சர்ச்சின் பேராயர், கார்டினல் ஜார்ஜ் அலஞ்சேரி, மலங்காரா சிரிய தேவாலயத்தின் பேராயர், கார்டினல் பாஸிலியஸ் மார் கிளீமஸ் மற்றும் மும்பையின் கார்டினல் பேராயர் ஓஸ்வால்ட் கிரேசியஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக சந்தித்தனர்.

 கேரள கத்தோலிக்க திருச்சபை 'லவ்ஜிகாத்' விவகாரத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று கார்டினல்களும் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது, இந்த சந்திப்பு பாசிட்டிவ் ஆக இருந்தது என்றும் பிரதமர் மோடி அவர்களின் பிரச்சினைகளுக்கு பொறுமையாக காது கொடுத்து கேட்டதாகவும் கூறினர்.

 சர்ச்சைக்குரிய லவ் ஜிகாத் விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. சிரோ மலபார் கத்தோலிக்க திருச்சபை சமீபத்தில் தன்னுடைய கூற்றுக்களில் லவ் ஜிகாத் உண்மையானது என்றும் அது கிறிஸ்தவ பெண்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

 தேவாலயத்துக்கு உள்ளேயே பல பிரிவுகளிடம் இது சர்ச்சையை கிளப்பியது.  இந்த கூற்றுகள் மதங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளானது. கேரளா பா.ஜ.கவும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

 சிறுபான்மையின மாணவர்களுக்காக வழங்கப்படும் கல்வி தொகையில் கிறிஸ்தவர்களுக்கு 20 சதவிகிதம் மட்டுமே கிடைப்பதாகவும் 'மற்றொரு' சிறுபான்மையின கும்பல் மிச்சம் மீதம் உள்ள அனைத்தையும் எடுத்துக் கொள்வதாகவும் எனவே ஆனால் தங்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு 41 சதவிகித உதவி தொகை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

 கத்தோலிக்க தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு பெரும் முக்கியத்துவத்தை பெறுகிறது. ஏனெனில் இது மிசோரம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையின் தாக்கத்தினால் நடத்தப்பட்டது. அவர் முன்னாள் கேரள பா.ஜ.க வின் தலைவர் ஆவார்.

கேரள பா.ஜ.க, பிரதமர் மோடி கத்தோலிக்க தேவாலய தலைவர்களை சந்தித்து இதுகுறித்து உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கிறிஸ்தவ சமூகத்தின் ஆதரவு கேரள மாநிலத்தில் பா.ஜ.கவுக்கு மிகவும் முக்கியமானது என்பதை அக்கட்சி அறிந்திருக்கிறது மற்றும் ஆர்த்தடக்ஸ், யாக்கோபின் தேவாலயங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அங்கே பா.ஜ.க முன்னிலை வகிப்பதால் பா.ஜ.கவிற்கு கிறிஸ்தவ சமூகங்களில் ஒரு திட்டவட்டமான ஆதரவு தளம் உருவாகும் என்று அது உணர்கிறது.

 பா.ஜ.க மாநில தலைவர் கே. சுரேந்திரன் IANS ற்கு தொலைபேசி வாயிலாக கூறியபோது, "பிரதமர் தேவாலய திருச்சபை தலைவர்களை சந்திப்பது ஒரு நல்ல விஷயமாகும். தங்களுடைய உண்மையான குறைகளை அவர்கள் தெரியப்படுத்தி உள்ளனர்.   என்ன நடப்பது நடக்கிறது என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார். 

Courtesy: PTI

Similar News