சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் பொதுக்கூட்டம்: தேர்தல் அதிகாரி தகவல்.!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பொதுக்கூட்டம், பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

Update: 2021-03-02 02:33 GMT

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பொதுக்கூட்டம், பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமை தாங்கினார்.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் எடுத்துரைத்தார்.


 



இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேர்தல் சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுக்கூட்டம், மற்றும் பேரணி நடத்துவது பற்றி அரசியல் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதே சமயம் நோட்டீஸ் அச்சடிக்கும்போது அச்சகத்தின் பெயர் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும் சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொது கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News