வேளச்சேரியில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது: சனிக்கிழமை மறுவாக்குப்பதிவு.!

ஊழியர்கள் எடுத்து சென்றது பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. ஆனால் இதனை அரசியல் கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டது. இருப்பினும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Update: 2021-04-15 05:13 GMT

சென்னை, வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்ட காரணத்தால், வருகின்ற 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சென்னை, வேளச்சேரியில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் பின்னர் பணியில் இருந்து ஊழியர் தவறுதலாக வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து சென்றுள்ளார். இதனை கவனித்த கட்சியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.




 


இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து சென்ற ஊழியர்களை போலீசார் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்து இயந்திரங்களை கைப்பற்றினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, வேளச்சேரி தொகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தது.

ஊழியர்கள் எடுத்து சென்றது பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. ஆனால் இதனை அரசியல் கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டது. இருப்பினும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.


 



இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வேளச்சேரி பகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி சென்னை வேளச்சேரி தொகுதியில் 92வது எண் கொண்ட வாக்குச்சாவடிக்கு வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் முடிவடைகிறது.

இதனால் அரசியல் கட்சிகள் அந்த வார்டில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் வேளச்சேரி வார்டில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News