நாளை பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர் எடப்பாடி.. முன்கூட்டியே சென்ற சிறப்பு டி.ஜி.பி.,!

நாளை பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர் எடப்பாடி.. முன்கூட்டியே சென்ற சிறப்பு டி.ஜி.பி.,!

Update: 2020-12-18 16:34 GMT

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன. இதனால் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பணியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்றத்தில் உள்ள பெரிய சோரகை கரிய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி நாளை (18ம் தேதி) காலை 9 மணிக்கு பெரிய சோரகை சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட திரளானோர் பங்கேற்கிறார்கள். முன்னதாக அவர் தேர்தல் பிரசாரம் செய்யும் சிறப்பு வாகனம் அந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் தொடங்குவதையொட்டி தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் இன்று சேலம் வருகிறார்.

எடப்பாடி பகுதியில் மினி கிளினிக் தொடங்கும் இடம் மற்றும் தேர்தல் பிரசாரம் தொடங்கும் இடங்களில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.
 

Similar News