பிரச்சாரங்கள் அனைத்தும் பொய்த்த நிலையில் ஜெயலலிதா இறப்பு விவகாரமாவது கை கொடுக்குமா என்ற தி.மு.க கணக்கு.!

பிரச்சாரங்கள் அனைத்தும் பொய்த்த நிலையில் ஜெயலலிதா இறப்பு விவகாரமாவது கை கொடுக்குமா என்ற தி.மு.க கணக்கு.!

Update: 2020-10-20 09:00 GMT

தி.மு.க வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டும் என தன் வாழ்நாள் உழைப்பை எல்லாம் கொட்டி வருகிறது. அந்த உழைப்பெல்லாம் மக்களின் விழிப்புணர்வு காரணமாக தி.மு.க'வின் தந்திர வேலைகள் அனைத்தும் மக்களிடம் எடுபடாமல் ஒவ்வொன்றாக பிரச்சாரம் அனைத்தும் பொய்த்து வருகிறது. போதாக்குறைக்கு 380 கோடி பிரசாந்த் கிஷோர் என்பவரிடம் குடுத்து ஐ பேக் என்னும் நிறுவனத்தை மக்களிடம் தி.மு.க'வின் ஊழல் பிம்பத்தை மாற்ற முயற்சித்தது.

ஆனால் அதுவும் ஒருபுறம் தோல்வியில் முடிந்துள்ளது. ஐ பேக்'ன் போலி பிரச்சார யுக்திகள் மக்களிடத்தில் தி.மு.க'விற்கு இன்னும் அதிகமாக அவப்பெயர் ஏற்படுத்தி தந்ததே தவிர தி.மு.க கனவு கண்டது போல் மக்களை வசப்படுத்தவில்லை. ஒருவரை குறை கூற முதலில் தான் ஒழுங்காக இருக்க வேண்டும் அந்த வகையில் தி.மு.க மத்திய, மாநில அரசுகளை குறை கூற தகுதியானதா என மக்கள் எடை போட துவங்கிவிட்டனர்.

'ஹிந்தி எதிர்ப்பு' என்ற அரதப்பழசான போராட்டத்தை கையில் எடுத்தனர் மக்கள் "ஏன் உங்கள் பிள்ளைகள் மட்டும் படிக்க வேண்டும் நாங்கள் படிக்க கூடாதா?" என தி.மு.க'வை பார்த்து கேட்க அதை அப்படியே கிடப்பில் போட்டது தி.மு.க.

'நீட் தேர்வு எல்லாம் கடினம், எங்கள் மாணவர்களை அது பாதிக்கும்' என பொய் பிரச்சாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டனர். மாணவர்களோ "எங்கள் எதிர்காலத்திற்கு எந்த படிப்பு தேவை என தெரியும், எங்களால் முடியாது என கூற நீங்கள் யார்?" என தி.மு.க'வை திருப்பி கேட்க தற்பொழுது நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வெட்கமில்லாமல் சிரித்து வருகின்றனர்.

சிறுபான்மையினர் வாக்கு வங்கியை குறிவைத்து மத்திய மோடி அரசு கொண்டு வந்த 'குடியுரிமை திருத்த சட்டம்' அமல்படுத்தப்பட்டால் இங்குள்ள இஸ்லாமியர் அனைவரும் பாகிஸ்தான் செல்ல வேண்டியதுதான் என பொய் பரப்பி இஸ்லாமியரை பயம் கொள்ள செய்து வீதிக்கு வரவழைத்து போராடினர். அதிகம் வெளியுலக பரிச்சர்யம் இல்லாத இஸ்லாமிய வீட்டு பெண்கள் கூட தி.மு.க'வின் பேச்சை கேட்டு வீதிக்கு வந்து சமையல் செய்து ரோட்டில் இறங்கி போராடினர். ஆனால் 'குடியுரிமை திருத்த சட்டம்' வந்து ஒர் ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது இஸ்லாமியர் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவர் என்ற பொய் பிரச்சாரத்தை இஸ்லாமியரே புரிந்து கொண்டுள்ளனர். அதிலும் தி.மு.க மண்ணை கவ்வியது.

சரி என்று கொரோனோ காலத்தில் "ஒன்றினைவோம் வா" என விளம்பரபடுத்தினர். தி.மு.க'வின் மாவட்ட செயலாளர்கள் கையில் உள்ள காசை எல்லாம் வாரி இறைத்து நிவாரண விழா நடத்தினர் ஆனால் மக்களோ 'ஏன்பா வீட்ல இரு, விலகி இரு'ன்னு அரசாங்கம் செல்லுது! நீங்க என்னப்பா "ஒன்றிணைவோம் வா"ன்னு காமெடி பன்றீங்க'ன்னு கேட்கவே" அதிலும் தி.மு.க தலையில் மண் விழுந்தது.

போதாக்குறைக்கு உதயநிதியை முன் நிறுத்த கட்சி சீனியர்கள் 'அட என்னப்பா இவர் தாத்தா'க்கு உழைச்சோம், இவர் அப்பா'க்கு உழைச்சோம், இப்ப இந்த பொடி பையனுக்குமா?" என நினைத்துக்கொண்டு மற்ற கட்சிகளுக்கு தாவினர் இன்னும் தாவ காத்து கொண்டிருக்கின்றனர் இது தி.மு.க கோட்டையில் விழுந்த மிகப்பெரிய ஓட்டை.

இப்படி செல்லும் திசை எல்லாம் அடி வாங்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க தற்பொழுது எடுத்திருப்பதோ மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரண விவகாரம். இது தொடர்பாக நீதி வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அவரது 'நடிகர்' மகனும் தனது அறிக்கைகள் மூலம் 'மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரத்திற்கு நீதி வேண்டும்' என அறைகூவல் விடுத்துகொண்டிருக்கின்றனர். இதனை பார்த்த தி.மு.க உடன்பிறப்புகளே "ஆமா இருக்குற பிரச்சினை எல்லாம் முடிச்சுட்டார் இதுல இந்த பிரச்சினை'க்கு வந்துட்டார்" என உடன்பிறப்புகளே புலம்பும் அளவிற்கு இருக்கிறது ஸ்டாலின் மற்றும் அவரது 'நடிகர்' மகன் உதயநிதியின் ராசதந்திரங்கள். பாவம் தி.மு.க இப்படி தலைமைக்கு திண்டாடும் என அண்ணாதுரையும், கருணாநிதி'யும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

Similar News