சமாதான கொடியுடன் டெல்லி பா.ஜ.க தலைவர்களை சந்திதித்த ஸ்டாலின் குடும்ப பிரதிநிதி.!

சமாதான கொடியுடன் டெல்லி பா.ஜ.க தலைவர்களை சந்திதித்த ஸ்டாலின் குடும்ப பிரதிநிதி.!

Update: 2020-10-19 07:21 GMT

தி.மு.க வரும் சட்டமன்ற தேர்தலை வாழ்நாள் வாய்ப்பாக பார்க்கிறது. கருணாநிதி மறைவிற்கு பின் ஸ்டாலின் தலைமையில் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதாலும், அதிலும் ஸ்டாலினே முதல்வர் வேட்பாளர் என்பதாலும், எந்த வகையிலும் சட்டமன்ற தேர்தலில் சறுக்கி விட கூடாது என்று கவனமான வழியில் தி.மு.க ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறது.

அதிலும் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க அரசுடன் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கைகோர்த்திருப்பதால் வலுவான நிலையில் அ.தி.மு.க தேர்தலில் இறங்கும் என்ற கணக்கையும் தி.மு.க தரப்பு எதிர்பார்க்கிறது. இதனால் மத்திய அரசுடன் இடக்கமான சூழலை கடைபிடித்தாவது வரும் சட்டமன்ற தேர்தலை தனக்கு இணக்கமாக மாற்ற தி.மு.க தரப்பு முயல்வதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இதன் வெளிப்பாடாக கடந்த வாரம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் டெல்லிக்கு சமாதான கொடியுடன் சென்று பா.ஜ.க தலைவர்களை சமரசபடுத்த முயற்சித்ததாக தகவல்கள் வருகின்றன.

கடந்த வாரம் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் தனது முக்கியமான நண்பர்கள் மூலம் பா.ஜ.க முக்கிய தலைவர்களை சந்திக்க அனுமதி கேட்டு பயணமாகினார். மேலும் சில முக்கிய பா.ஜ.க தலைவர்களை சந்திக்க நேரம் கேட்ட பொழுது கிடைக்காத காரணத்தினால் காத்திருந்ததாக தகவல்கள் கசிகின்றன.

மேலும் காத்திருப்பிற்கு பிறகு பா.ஜ.கவின் முக்கிய தலைவர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு ஸ்டாலினின் குடும்ப பிரதிநிக்கு கிடைத்திருக்கிறது. அந்த சந்திப்பில் "பா.ஜ.கவுடன் தி.மு.க இணக்கமாகவே செல்ல விரும்புகிறதாகவும், மத்திய அரசுக்கு கொள்கை ரீதியாகவே நாங்கள் எதிர்ப்பு செய்கிறோம் மாறாக பா.ஜ.க மீது எங்களுக்கு அரசியல் எதிர்ப்பு இல்லை" எனவும் சமாதான படலம் நடந்துள்ளது.

மேலும், "வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வரும்பட்சத்தில் எங்களின் முழு ஒத்துழைப்பு பா.ஜ.க'விற்கு இருக்கும் எனவும் அதற்கு பலனாக எங்கள் மீது அழுத்தங்களை குறைத்து கொள்ளவும்" எனவும் வெள்ளை கொடி பேச்சுவார்த்தை நடந்தேறியுள்ளது. இதனை கேட்டுகொண்ட பா.ஜ.க முக்கிய தலைவர் பதில் ஏதும் கூறவில்லையாம்.

மேலும் தமிழக பா.ஜ.க தரப்பிலும் தி.மு.க ஆட்சிக்கு வராமிலிருக்க எது வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாக தகவல்கள் டெல்லி மேலிடத்துக்கு பறந்துள்ளதால் தி.மு.க தரப்பிற்கு பா.ஜ.க மேலிடம் மௌனத்தையே பதிலாக தந்து அனுப்பியுள்ளதால் தி.மு.க தலைமை கடும் அப்செட்டில் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 2 ஜி வழக்கின் வேகம், ஜகத்ரட்ஷகன் மற்றும் கவுதம சிகாமணி போன்றோரின் சொத்துக்கள் முடக்கம் ஆகியவை தி.மு.க'வை தடுமாற செய்துள்ளதால் தூக்கம் தொலைத்து நிற்கின்றதாம் தி.மு.க தலைமை.

Similar News