இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனிற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆதரவு?

இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனிற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆதரவு?

Update: 2020-10-24 14:47 GMT

இந்து வீட்டு பெண்களை கொச்சைபடுத்தி பேசிய திருமாவளவன் மீது வழக்கு பதியப்பட்டதிற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் திருமாவளவன் கூறிய இந்து பெண்கள் விபச்சாரிகள் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு இந்து மத துவேஷத்தை ஊற்றி வளர்க்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று அவதூறு கருத்து தெரிவித்ததாக, வி.சி.க தலைவர் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமாவளவன் இது தொடர்பாக, "இந்து பெண்கள் அனைவருமே விபசாரிகள் தான்" என்று கொச்சையாக பேசியுள்ளார். மேலும் இந்து சாஸ்திரங்களில் இதுபோன்று இருப்பதாக ஒரு பொய்யான, அவதூறான கருத்தை பதிவிட்டுள்ளார். இது வேண்டும் என்றே ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் நோக்கிலும் மதரீதியான பிரிவுகளுக்கிடையே பகைமையை தூண்டும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து பெண்களை கொச்சைப்படுத்தி அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார். எனவே திருமாவளவன் மற்றும் பெரியார் யூ-டியூப் சேனல் நிர்வகிப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது

இந்த புகாரின்படி, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பெரியார் யூ-டியூப் சேனல் நிர்வாகிகள் மீது ஐபிசி 153, 153ஏ(1)(ஏ), 295ஏ, 298, 505(1)(பி), 505(2) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பதியப்பட்டதை எதிர்த்து தி.மு.க'வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் அறிக்கையானது வெளியானது. அதில், ""விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதை திரித்து - வன்முறையை தூண்டும் மதவெறியர்களை விடுத்து - @thirumaofficial மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது"

- கழக தலைவர் @mkstalin அறிக்கை" என்று இந்த வழக்கு பதிவு நடவடிக்கையை எதிர்த்து கண்டனம் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்து மத அவமதிப்பு, இந்து மத சடங்குகளை கொச்சைபடுத்துதல், இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் கூறாமல் புறக்கணிப்பது, இந்துக்களின் புனித சின்னமான விபூதியை பொது வெளியில் யாராவது மரியாதை நிமித்தமாக வைத்தால் கூட அதனை அங்கேயே அழித்து மனதில் உள்ள இந்துக்களின் மீதான குரோதத்தை காட்டுவது என இந்து மத வெறுப்பை தி.மு.க தலைவர் ஸ்டாலின் முழு மூச்சாக செய்து வருகிறார். இந்த நிலையில் திருமாவளவன் கொச்சையான பேச்சிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமா அதனை கண்டித்து வழக்கு தொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வரும் வேளையில் இந்து மக்கள் தங்களை தோற்கடித்தாலும் பரவாயில்லை ஆனால் இந்து மத துவேஷமே எங்கள் மூச்சு என்ற ஸ்டாலின் எண்ணங்கள் மக்களுக்கு தெளிவாக புரிகிறது.

Similar News