எது அரசியல்? எது அவியல்? ஸ்டாலின் உணர்ந்துள்ளாரா?

எது அரசியல்? எது அவியல்? ஸ்டாலின் உணர்ந்துள்ளாரா?

Update: 2020-10-26 09:20 GMT

எதிர்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? - எதிர்கட்சிதலைவராகிய ஸ்டாலின் உதிர்த்த முத்தான வார்த்தைகள் இவை! 'எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன' என்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் எதுகை மோனையுடன் கூடிய எகத்தாள பதில் இது.

எதிர்கட்சிகளின் அரசியல் என்பது என்ன? காங்கிரஸ் ஆட்சிக்காலம் முடிந்து தி.மு.க ஆட்சிபீடத்தில் அமர்ந்த பொழுது காமராஜரிடம் கேள்வி எழுப்பபட்டது 'இந்த திராவிட முன்னேற கழக ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என?" அப்பொழுது, "இப்பொழுதுதானே அவர்கள் வந்திருக்கிறார்கள் இன்னும் 6 மாத காலம் போகட்டும் பிறகு கூறலாம் கருத்து" என பெருந்தன்மையுடன் கூறினார்.

காரணம் எதிர்கட்சி என்பது ஆளுங்கட்சி நெறி தவறும் போதும், ஆளுங்கட்சி'யின் நடவடிக்கைகளால் மக்கள் அவதியுறும் போதும், ஆளுங்கட்சி மக்களுக்கு அநீதி இழைக்கும் போதும், ஆளுங்கட்சி மக்களை தன் லாபத்திற்காக வஞ்சிக்கும் போதும் 'மக்களுடன் மக்களாக' நின்று அவர்களை உயர்த்த எதிர்கட்சி அரசியல் செய்ய வேண்டும்

மாறாக தி.மு.க செய்வது போல் மக்களை திசை திருப்ப போராட்டம் என்ற பெயரில் குழப்பம் ஏற்படுத்த முயல்வது கண்டிப்பாக அரசியல் அல்ல அவியல்'தான்.

முதலில் ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க'விற்கு அரசியலுக்கும், அவியலுக்கும் வித்தியாசம் தெரியுமா?

நீட் வேண்டும் ஆனால் இது முறையான பயிற்சியுடன் வேண்டும் என்பது அரசியல்!

நீட் கூடாது என்று கல்வி தந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது அவியல்!

விவசாய மசோதா'வில் விவசாயி நலன் இருக்கிறதா என பார்ப்பது அரசியல்!

நலன் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன நாம எதிர்க்கனும் என்பது அவியல்.

புதிய கல்வி கொள்கை சாதக,பாதகங்களை அலசுவது அரசியல்!

புதிய கல்வி கொள்கையே என்னவென்று தெரியாமல் புலம்புவது அவியல்!

ஹிந்தி வேண்டும் ஆனால் அது தமிழை அழிக்காமல் உபமொழியாக வேண்டும் என்பது அரசியல்!

ஹிந்தி வந்தால் தமிழ் அழியும் என கூறி தான் மட்டும் சம்பாதிக்க வியாபாரமாக செய்வது அவியல்!

நல்லவல்கள், இளைஞர்கள் வந்தால் தமிழகத்திற்கு எதிர்காலம் என்பது அரசியல்!

கருணாநிதிக்கு பிறந்த ஒரே காரணத்தில் பதவிக்கு வர எந்த உள்ளடி வேலைகளையும் செய்ய தயார் என்பது அவியல்!

தமிழர்களுக்கு அரசியல், அவியல் பாடம் எடுக்க ஸ்டாலின் தேவையில்லை ஏனெனில் அரசியல் சாணக்கியர் என்று உங்களால் போற்றப்படும் கருணாநிதியின் கடைசி காலத்தில் இதுதான் அரசியல் என கருணாநிதிக்கே கற்பித்தவர்கள் 'தமிழர்கள்' அதிலும் 'நாட்டுப்பற்றுள்ள தமிழர்கள்' என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்.

Similar News