"70 தொகுதிகளை அடம்பிடித்து வாங்கி 70 தேர்தல் கூட்டம் கூட போடவில்லை" காங்கிரஸ் மீது கடும்கோபத்தில் கூட்டணி கட்சிகள்!

"70 தொகுதிகளை அடம்பிடித்து வாங்கி 70 தேர்தல் கூட்டம் கூட போடவில்லை" காங்கிரஸ் மீது கடும்கோபத்தில் கூட்டணி கட்சிகள்!

Update: 2020-11-16 08:22 GMT

பீகார் தேர்தலில் மகா கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக காங்கிரஸ் கட்சி அமைந்தது. 150 இடங்களில் போட்டியிட்ட லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 75 இடங்களில் வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 70 இடங்களை அடம்பிடித்து பெற்று போட்டியிட்டு வெறும் 19 இடங்களை மட்டுமே வென்றது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு லாலு மகன் தேஜஸ்வி யாதவின் முதல்வர் கனவு தகர்ந்தது.

இதனால் ஆர்.ஜே.டி கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்கள் மீது கடும்கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் ஆர்.ஜே.டி கட்சியின் மூத்த தலைவரான ஷிவானந்த் திவாரி.

அப்போது "காங்கிரஸ் கட்சி அடம்பிடித்து 70 தொகுதிகளை போட்டியிடப் பெற்றுக்கொண்டது, ஆனால் மொத்தமாகவே 70 கூட்டங்களைக் கூட ஒழுங்காக அவர்கள் பீகாரில் நடத்தவில்லை. பிறகு எப்படி ஜெயிக்க முடியும்?" என பொங்கித் தள்ளினார்.

ராகுல் காந்தி மொத்த மூன்று நாட்கள் தான் பிரசாரத்திற்கு வந்தார். மூன்று நாட்களிலும் நாளுக்கு வெறும் இரண்டு கூட்டம் வீதம் மொத்தம் ஆறு கூட்டங்கள் தான் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்திற்கு வரவே இல்லை. இவர்கள் வெற்றிப் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

இது பீகார் மகா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News