ஒரு புறம் கூட்டணி பேச்சு - மறுபுறம் ஆள்களை இழுப்பு என தே.மு.தி.கவிற்கு குழி பறிக்கும் தி.மு.க.!

ஒரு புறம் கூட்டணி பேச்சு - மறுபுறம் ஆள்களை இழுப்பு என தே.மு.தி.கவிற்கு குழி பறிக்கும் தி.மு.க.!

Update: 2020-12-17 15:31 GMT

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க, அ.தி.மு.க'வுடன் கூட்டணி வைத்தது. நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. தற்போது வரைக்கும் அ.தி.மு.க கூட்டணியில் தொரட்கிறது. சமீபத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி என் அறிவிப்பை தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்த் அவர்களின் மனைவியுமான பிரேமலதா வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில் அ.தி.மு.க மட்டுமில்லாமல் தி.மு.க'வுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. "தி.மு.க'வும் '15 தொகுதிகள் தரப்படும் என்றும், தேர்தல் செலவிற்கு, தொகுதி அடிப்படையில் பணம் தரப்படும்" என, உறுதி தந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதை தே.மு.தி.க தரப்பு ஏற்கவில்லை. அதனால், ஒருபக்கம் கூட்டணி பேச்சு நடத்தியபடியே மற்றொரு புறம் தே.மு.தி.க ஆட்களை வளைக்கும் வேளைகளை தி.மு.க துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன் முதற்கட்டமாக வடசென்னை மாவட்ட தே.மு.தி.க செயலர் மதிவாணன் தி.மு.க'வால் ஆசை காண்பித்து தே.மு.தி.க'வை விட்டு பிரிய வைக்கப்பட்டுள்ளது. இவரும் சமீபத்தில் தி.மு.க'வின் ஆசை வார்த்தைகளில் மயங்கி இணைந்துள்ளார்.

தே.மு.தி.க கூட்டணிக்கு உடன்படாத பட்சத்தில் இவரை போலவே பலரை ஆசைகாட்டி  தே.மு.தி.க'வில் இருந்து தி.மு.க'விற்கு இழுக்க வேலைகள் நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source - தினமலர்

Similar News