அசாமில் என்ட்ரி கொடுத்த அமித்ஷா - பா.ஜ.கவில் இணையத் தயாராகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

அசாமில் என்ட்ரி கொடுத்த அமித்ஷா - பா.ஜ.கவில் இணையத் தயாராகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

Update: 2020-12-27 07:00 GMT

உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று இரவு குவஹாத்திக்கு சென்றுள்ள நிலையில் தனது பயணத்தின்போது அசாம் மற்றும் மணிப்பூரில் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கவுள்ளார்.

"தங்கள் அன்புக்குரிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நள்ளிரவில் குவாஹாத்தி வந்ததடையும்போது வீதிகளில் திரண்டு பொதுமக்கள் வியக்கத்தக்க முறையில் உற்சாக வரவேற்பு அளிப்பர்" என்று அசாம் நிதியமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மாஷா மாநில வருகைக்கு முன்னதாக ட்வீட் செய்துள்ளார்.

அசாமுக்கு இரண்டு நாள் பயணத்தின்போது, ​​அசாம் தரிசன திட்டத்தின் கீழ் அசாமின் மடங்கள் என்று பொருள்படும் 8000 நம்கர்களுக்கு ரூ 155 கோடி மதிப்புள்ள நிதி உதவி விநியோகம் உள்ளிட்ட பல திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைப்பார்.

நாகானில் படத்ரவா தானின் வளர்ச்சிக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டுவார். இந்த இடத்தை கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாக மாற்ற அசாம் அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குவஹாத்தியில் உள்ள வடகிழக்கு பிராந்தியத்தின் மிகப்பெரிய மருத்துவக் கல்லூரிக்கும், மாநிலத்தில் 10 மருத்துவக் கல்லூரிகளுக்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறும்.

உள்ளூர் அறிக்கையின்படி, முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜந்தா நியோக் உள்ளிட்ட சில உள்ளூர் தலைவர்கள் அமித்ஷா வருகையின் போது பா.ஜ.கவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை இம்பாலுக்குச் செல்லும் அமித் ஷா, மணிப்பூரில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். 2016 இல் தொடர்ந்து 15 ஆண்டு காலம் மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைவர் தருண் கோகோய் சமீபத்தில் காலமான நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸில் பெரும் வெற்றிடம் நிலவுகிறது. இதனால் இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அமித்ஷாவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Similar News