சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

Update: 2021-01-22 09:42 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலாவிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை சிறை அதிகாரிகள் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு முதற்கட்டமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் சற்று உடல் நலம் தேறிய நிலையில் அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதனிடையே பி.சி.ஆர் டெஸ்ட்டும் எடுக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவருக்கு விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவரது உறவினர்கள் சிறை நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். சிறையில் உள்ளவருக்கு எப்படி தொற்று ஏற்படும் என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜராஜன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் ஒன்றையும் அளிதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 70 வயதுடையவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சரியாகுமோ அல்லது அவரது உடல்நிலை மேலும் மோசமாகுமோ என்ற மனநிலையில் புலம்பி வருகின்றனர்.

Similar News