விவசாயிகள் போராட்டத்திற்கு ஒபாமா ஆதரவு ட்விட்டா.? பிரதமர் மோடியின் பெயரை களங்கப்படுத்தும் எதிர்க்கட்சிகள்.!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஒபாமா ஆதரவு ட்விட்டா.? பிரதமர் மோடியின் பெயரை களங்கப்படுத்தும் எதிர்க்கட்சிகள்.!

Update: 2020-12-15 08:42 GMT

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாது என்று கூறப்படுகிறது.

இந்த விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தூண்டி வருகிறது. இது உலக அளவில் முன்னிலைப்படுத்தும் பொருளாக மாறியுள்ளது.
விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என இரண்டு தரப்பினரும் தங்களுக்குச் சாதகமாக சமூக வலைதளங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், பிரபலமானவர்ளைக் குறித்து, தவறான செய்திகளைப் பரப்ப, நடந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது வெட்கக்கேடானது என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறினார் என்று போலீயான ட்வீட்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபராக இருந்தபோது பல முறை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். 2014-ம் ஆண்டு முதல் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த நபருடன் ‘கை குலுக்கியதை நினைத்து இன்று நான் வெட்கப்படுகிறேன்’ என, பிரதமர் மோடியும் ஒபாமாவும் கை குலுக்குவது போன்ற படத்துடன், பராக் ஒபாமா தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 5ம் தேதி அன்று பகிர்ந்து இருப்பது போன்ற படங்கள் (ஸ்கிரீன் ஷாட்கள்) எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் போலீயாக பரப்பப்பட்டு வருகிறது.

இந்த ஸ்கிரீன் ஷாட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் படம், உண்மையாகவே 2014ம் ஆண்டு மோடியும், ஒபாமாவும் சந்தித்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம். இந்த ஸ்கிரீன் ஷாட் பார்ப்பதற்கு உண்மை போலவே இருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த ட்விட்டர் பதிவு போலியானது. ஸ்கிரீன் ஷாட்டில் இருக்கும் ஆங்கிலம் மோசமாக இருக்கிறது. அதில் எழுத்துப் பிழைகள் உள்ளது. ஒபாமாவின் ட்விட்டர் பதிவை, பொய் பிரசாரம் செய்தவர்கள் திருத்தி இருப்பது போலத் தெரிகிறது.

ஒபாமாவின் ட்விட்டர் பதிவுகளை கடந்த மாதம் முதல் தேதி வாரியாக வரிசையாக பார்த்து வந்தால், கடந்த மாதம் விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து, ஒபாமா இப்படி ஒரு விஷயத்தை ட்விட்டரில் பதிவிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் போலீயாக பரப்பப்பட்டு வருகிறது என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

Similar News