உறுதி மொழியா? தமிழ் தெரியாமல் திரு திருவென விழித்த தே.மு.தி.க. வேட்பாளர்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கியது. இதனால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும்.

Update: 2021-03-19 03:57 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கியது. இதனால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும்.

இந்நிலையில், சென்னை திருவிக நகர் சட்டமன்ற தனி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் தனது கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்புமனுதாக்கல் செய்வதற்கு சென்றிருந்தார்.

அப்போது தேமுதிக வேட்பார் சேகர் கையில் உறுதி மொழிப் பத்திரத்தை வைத்துக் கொண்டு திரு திருவென விழத்துக் கொண்டிருந்தார். அவருக்கு தமிழ் படிக்க தெரியாது என்பதை அப்போதுதான் உடன் வந்த மாவட்ட செயலாளர் அறிந்துள்ளார்.

இதனையடுத்து மாவட்ட செயலாளர் உறுதி மொழியை நிதானமாக வாசிக்க, அதனை வேட்பாளர் சேகர் அப்படியே திருப்பி சொல்லி வந்தார். அந்த நேரத்தில் மிகவும் பதற்றத்துடனே சேகர் காணப்பட்டார். எங்கே தமிழ் தெரியாது என்பதால் வேட்புமனுவை நிராகரித்து விடுவார்களோ என்ற மனநிலையிலேயே இருந்தார்.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழக சட்டமன்றத்திற்கு போட்டியிடும் ஒரு தொகுதியின் வேட்பாளர் தமிழ் கூட தெரியாமல் போட்டியிடுகிறார் என்றால், எப்படி தொகுதி மக்களின் பிரச்சனை குறித்த மனுவை படிப்பார். இது போன்றவர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும்.

தொகுதி மக்களும் இது போன்றவர்களை நிராகரித்து நல்ல சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Similar News