இன்டர்நெட், வைபையில் பணி செய்யக்கூடாது.. தி.மு.க. வேட்பாளர்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!

தமிழகம் முழுவதும் தினந்தோறும் திமுகவினர் கொடுக்கும் அழப்பறைகள் கொஞ்சம் அதிகமாகவே செல்கிறது.

Update: 2021-04-21 04:44 GMT

தருமபுரியில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தினந்தோறும் திமுகவினர் கொடுக்கும் அழப்பறைகள் கொஞ்சம் அதிகமாகவே செல்கிறது. ஒரு கன்டெய்னர் லாரிக்கூட சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகளை மடக்குவது, வாக்கு எண்ணும் மையத்திற்கு எதிரே உள்ள வீடுகளில் உள்ள டிஸ் ஆன்டனாவை கழற்ற சொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள திமுக வேட்பாளர்கள் ஒரு மனு ஒன்றை அளித்துள்ளனர். அதாவது, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள் வைபை மற்றும் இன்டர்நெட்டில் பணி செய்யக்கூடாது.




 


மேலும், ஊழியர்கள் விடுதியில் தங்கக்கூடாது. இதனை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுத்து வருவார்கள். மற்றும் தேர்வுக்கான ஹால்டிக்கெட் தயார் செய்வது போன்ற பணிகளை செய்வார்கள். இதனை திமுகவினர் தடுப்பது வேடிக்கையாக உள்ளது.

பூட்டப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படி வைபை மூலமாக மாற்ற முடியும். வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கால்குலேட்டர் போன்றது என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெளிவுப்படுத்தி விட்டது. ஆனாலும் திமுகவினர் இது போன்றவற்றை நம்பாமல் இன்றும் படிக்காதவர்களை போன்று நடந்து கொள்வதைதான் பார்க்க முடிகிறது.

Similar News