பழனியில் தி.மு.க., நடத்திய கிராம சபைக்கூட்டம்.. பிரியாணிக்கு அலை மோதிய தொண்டர்கள்.. முகம் சுழித்த பொதுமக்கள்.!

பழனியில் தி.மு.க., நடத்திய கிராம சபைக்கூட்டம்.. பிரியாணிக்கு அலை மோதிய தொண்டர்கள்.. முகம் சுழித்த பொதுமக்கள்.!

Update: 2020-12-23 19:40 GMT

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சரவணபட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் இல்லாமல் கலந்து கொண்டவர்களுக்கு கறி விருந்தும் நடத்தப்பட்டுள்ளது.

புதியவகை கொரோனா வைரஸ் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நோய் பரப்பும் விதமாக நடத்தப்பட்ட திமுகவினரின் கிராமசபைக்கூட்டம் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கிராமசபைக்கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் இன்று பழனியருகே உள்ள சரவணபட்டி கிராமத்தில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சரவணபட்டி கிராமத்தில் நடந்த கிராமசபைக்கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்துகொண்டு உரையாற்றினார்.

திண்டுக்கல் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான பொன்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். புதியவகை கொரோனா வைரஸ் குறித்த அச்சம் தமிழகம் முழுவதும் நிலவிவரும் நிலையில் பாதுகாப்பு இல்லாமல் நோய்பரவும் வகையில் திமுகவினர் நடத்திய கிராமசபைக் கூட்டம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உரிய பாதுகாப்பு இன்றி கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் திமுக சார்பில் தடபுடலான கறிவிருந்தும் நடத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்திவரும் நிலையில், முறையான சமூக விலகல் மற்றும் முகக்கவசம் இன்றி திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

சமூகவிலகல் மற்றும் முகக்கவசம் இன்றி திமுக நடத்திய கிராமசபைக்கூட்டம் அப்பகுதி மக்களிடம் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News