வேலூர் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டலா ? ராமேஸ்வரத்தில் நடந்தது என்ன ?

வேலூர் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டலா ? ராமேஸ்வரத்தில் நடந்தது என்ன ?

Update: 2021-02-22 09:06 GMT

தி.மு.க, இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுப்பதாக ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நேற்று நடந்த மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராஹிம் பேச இருந்தார் நேற்று ராமேஸ்வரம் வந்த அவரை மண்டபம் செல்ல போலீசார் தடுத்தனர். எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், பொதுக் கூட்டத்தில் பேச தடை விதிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


ராமேஸ்வரத்தில் எம்.இப் ராஹிம் கூறியதாவது, "பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் மக்களிடம் பிரச்சாரம் செய்வதால் தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறும் பொய் பிரச்சாரத்தை மக்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் தி.மு.க ஆதரவுடன் இஸ்லாமிய அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் , எஸ்.டி.பி.ஐ., போன்ற சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். அச்சுறுத்தல் இருந்தால் பாதுகாப்பு கொடுப்பது போலீசாரின் கடமை ஆனால் நான் மட்டும் பேசுவதற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதமானது. இது தொடர்பாக நீதிமன்றம் சென்று மீண்டும் மக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைப்பேன்" என்றார்.

இது தொடர்பாக பா.ஜ.க  கண்டனம் தெரிவித்துள்ளது.  மண்டபம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க தலைவர் கண்ணன் கூறுகையில், "மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட் டத்திற்கு, சில அமைப்புகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக போலீசார் கூறி, தடை விதித்தது கண்டனத் திற்குரியது அச்சுறுத்தல் உள்ளதால், மண்டபத்தில் இனிவரும் காலத்தில் அ.தி.மு.க, தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகள், அமைப்புகளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என போலீசில் மனு அளித்துள்ளேன்" என்றார்.

Similar News