தி.மு.க கரைவேட்டியால் அசிங்கப்பட்ட உடன்பிறப்பு - பெரம்பலூரில் தி.மு.க கரைவேட்டி கட்டிய நபரை உலுக்கிய பெண் அதிகாரி.!

தி.மு.க கரைவேட்டியால் அசிங்கப்பட்ட உடன்பிறப்பு - பெரம்பலூரில் தி.மு.க கரைவேட்டி கட்டிய நபரை உலுக்கிய பெண் அதிகாரி.!

Update: 2020-11-06 09:36 GMT

1960 முதல் 80'கள் வரை தி.மு.க கொடியை வீடுகளில் ஏற்றி வைப்பதும், தனது வீடுகளில் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி படங்களை வைத்திருப்பதையும் பெருமையாக நினைத்து உடன்பிறப்புகள் சுற்றி வந்த காலகட்டம் அது. அதிலும் தி.மு.க கரைவேட்டியை கட்டி வலம் வருவது என்பது சில உடன்பிறப்புகளுக்கு வாழ்நாள் சாதனை போல் நினைத்த காலகட்டங்கள் அவை ஆனால் இன்று தி.மு.க'வின் போக்கை வைத்து தி.மு.க கரைவேட்டி கட்டியவர்களை கோமாளி போல் பொதுமக்கள் பார்க்கும் காலம் இது. இதே போல் பெரம்பலூரில் நடந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, தி.மு.க கரை வேட்டியுடன் வந்ததால் ஓட்டல் உரிமையாளரை பெண் அதிகாரி ஒருவர் வறுத்தெடுத்து விட்டார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில், ஹோட்டல், பேக்கரி, டீ கடை போன்ற உணவகங்களின் உரிமையாளர்களுடன் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அணைத்து வகையான உணவகங்களின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.செளமியாசுந்தரி வந்திருந்தவர்களை தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது, அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் "யா யா" என்ற பெயரில் டீ ஸ்டால் வைத்திருக்கும் முன்னாள் நகராட்சிக் கவுன்சிலரான அப்துல்பாரூக் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அந்த சமயம் பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செளமியாசுந்தரி, "தி.மு.க. கரை வேட்டியில் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். தி.மு.க., அ.தி.மு.க என நான் எந்த கட்சிக்கும் யாருக்கும் பயப்படமாட்டேன்" என்று கூற, பாரூக்'ம் அந்த அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் இதனால், அதிர்ச்சியடைந்த பாரூக், "தி.மு.க என்றால் உங்களுக்கு என்ன இளக்காரமா ? கேவலமா போச்சா? நான் கட்சி சம்பந்தமாக எதுவும் பேசவில்லையே; கடை ஓனர் என்ற முறையில் கூட்டத்தில் பங்கேற்றேன், வேட்டி கட்டுவது என்னுடைய உரிமை" எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Similar News