ரோம் நகர 'வாடிகன்' சென்ற தி.மு.க அமைச்சர்கள் - காரணம் என்ன?

தி.மு.க அமைச்சர்கள் இருவர் ரோம் நகர் வாடிகனுக்கு செல்ல உள்ளது தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-14 11:00 GMT

தி.மு.க அமைச்சர்கள் இருவர் ரோம் நகர் வாடிகனுக்கு செல்ல உள்ளது தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் ரோம் சென்றுள்ளனர். இதற்கான காரணம் என்ன?தமிழ்நாடு அமைச்சர்கள் இருவரும் ஏன் செல்ல வேண்டும் என்று மக்களிடையே கேள்விகள் நிலவி வந்த நிலையில் தற்போது இது ஏன் என தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம்பிள்ளை பிறப்பால் இந்து சமயத்தை சார்ந்தவர், 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். மாறிய பின்பு லாசர் என்று பெயர் மாற்றிக் கொண்டார் மேலும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற அடிப்படை காரணமாக இருந்தவர் இவரே.

அப்பொழுது இருந்த திருவாங்கூர் அரசின் உத்தரவுப்படி இவர் செய்த மதமாற்ற செயல்களுக்காக இவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு கேரளத்தின் இன்றைக்கு கிறிஸ்தவ மதம் வியாபித்திருக்க முக்கிய காரணம் இவரே!

தேவசகாயம் என்ற இவருக்கு கடந்த ஆண்டு புனிதர் பதவிக்கு தகுதியானவர் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இத்தாலியிலுள்ள வாடிகன் நகரில் உள்ள ரோமில் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட உள்ளது. நாளை மே 15'ம் தேதி போப் ஆண்டவர் இவருக்கு புனிதர் பட்டத்தை அறிவிக்கிறார். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனிதர் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதன் காரணமாகவே தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நல துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.மனோ தங்கராஜ் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வாட்டிகனில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதம் பரவ காரணமாக இருந்தவர் கௌரவப்படுத்தும் நிகழ்வை தி.மு.க மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும் என நினைப்பது குறிப்பிடத்தக்கது.


Source - One India.com

Similar News