திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை எதிர்த்து பாஜக போட்டி.. துணை தலைவர் அண்ணாமலை பேட்டி.!

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை எதிர்த்து பாஜக போட்டி.. துணை தலைவர் அண்ணாமலை பேட்டி.!

Update: 2020-11-24 17:08 GMT

அரவக்குறிச்சியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., நின்றால் நேரிடையாக போட்டியிடும் என்று தமிழக பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் கூறியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


தமிழக துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று 2 நாட்களுக்கு முன் அறிவித்தார். அதன்படி வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என தெரிகிறது. இருப்பினும் தொகுதி பங்கீடு போன்றவற்றைப் பற்றி இன்னும் உறுதியான முடிவு அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில், இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக நேரடியாக போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். 


ஏற்கனவே பழனி தொகுதியை நிச்சயம் பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் என அண்ணாமலை கூறிய நிலையில் இன்று அரவக்குறிச்சி தொகுதியை அதிமுக தங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை சூசகமாக தற்போது கூறியுள்ளார் என்று அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. 

Similar News