திமுக எம்.பி. ராசாவுக்கு.. ஜெயலலிதா முன்னாள் வக்கீல் சவால்.!

திமுக எம்.பி. ராசாவுக்கு.. ஜெயலலிதா முன்னாள் வக்கீல் சவால்.!

Update: 2020-12-07 12:00 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி திமுக எம்.பி.ராசா தவறாக பேசினார். இது தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வக்கீல் ஜோதி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். டான்சி வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவுக்காக வாதாடியவர் வக்கீல் ஜோதி இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக 11 வழக்குகளில் நான் வாதாடியுள்ளேன். மறைந்த முதலமைச்சர் குறித்து திமுக எம்.பி.ராசா அவதூறாக பேசி வருகிறார்.


ராசா பேசியதில் எனக்கு வருத்தம் உள்ளது. 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டார். ஜெயயலிதா அரசியலைப்பு சட்டத்தை மீறியவர், கொள்ளைக்காரி என தீர்ப்பில் நீதிமன்றம் கூறவில்லை. ஜெயலலிதா இறந்தவுடன் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வேண்டாம் என ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருக்க வேண்டும். 


ஆனால் அதனை செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்றால் சசிகலா சுயலாபத்திற்காக விட்டுவிட்டார். அவ்வாறு செய்திருந்தால் ஜெயலலிதா பெயரே வந்திருக்காது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு எனக்கு தெரியும். நான் ராசாவுக்கு பதில் கூறுகிறேன். ராசா சொல்லும் இடத்தில் நான் விவாதிக்க தயார். 394ன் கீழ் ஜெயலலிதா குற்றமற்றவர் என கூறினார்.

Similar News