ரஜினி கட்சி தொடங்கியதும் திமுக அழியும்.. அமைச்சர் ராஜேந்திர பாஜலாஜி.!

ரஜினி கட்சி தொடங்கியதும் திமுக அழியும்.. அமைச்சர் ராஜேந்திர பாஜலாஜி.!

Update: 2020-12-10 12:41 GMT

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசினால் நான் சும்மா பார்த்து கொண்டிருக்க மாட்டேன் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: முதலமைச்சரை திமுக அவதூறாக பேசி வந்தால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.

மேலும், திமுக தலைவருக்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்பேன். அது மட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்கும்போது ஒரு சில கட்சிகள் அழிந்து போகும். அதில் முதலாவது திமுக தமிழகத்தை விட்டு அழிந்து போகும்.

கண்டிப்பாக இவை நடக்கும். மேலும், திமுக எம்.பி.க்கு பதிலடி கொடுக்கப்படும். என்று கூறினார். அதிமுக அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜி திமுகவுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்தாலும் நெத்தியடியாக கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அளித்த பேட்டியில் திமுகவிற்கு கடுமையான எச்சரிக்கையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News