‘‘தொண்டையில் இறங்கும் ஒவ்வொரு சொட்டுகுடிநீரையும் நன்றியுடன் குடிக்க வேண்டும்’’.. மிரட்டும் கேரளா மாடல்.!

‘‘தொண்டையில் இறங்கும் ஒவ்வொரு சொட்டுகுடிநீரையும் நன்றியுடன் குடிக்க வேண்டும்’’.. மிரட்டும் கேரளா மாடல்.!

Update: 2020-12-20 08:07 GMT

கேரள மாநிலம் ஹரிபாத் பகுதியில் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.கிருஷ்ண குமார் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரின் பேச்சு, மலையாளிகளை மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆழப்புலாவில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், தனக்கு வாக்களித்து கவுன்சிலராகத் தேர்ந்தெடுத்த 375 வாக்காளர்களுக்கு மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளுக்கு தான் பணியாற்ற உள்ளதாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"மற்றவர்கள் என்னிடம் உதவி கோரி வர வேண்டாம். சொல்லப்போனால் உங்களில் சிலர் உதவி கேட்டு வந்தால் இரண்டாம் தர, மூன்றாம் தர குடிமக்களாகத் தான் நடத்துவேன்." என்று தனக்கு வாக்களிக்காதவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார். இவ்வாறு பேசியது பா.ஜ.கவுக்கு வாக்களித்தவர்கள் மீது உள்ள கோபம் மற்றும் வெறுப்பால் தான் என்று கூறப்படுகிறது.
  

Loading tweet...

"இங்கு வசிப்பவர்கள் சாலையில் கால் வைக்கும் போது அது கிருஷ்ணகுமார் போட்ட சாலை என்று நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கம்யூனிஸ்டாகிய என்னால் கொண்டு வரப்பட்ட குழாய்த் தண்ணீரைக் குடிப்பவர்கள் நன்றியுடன் குடிக்க வேண்டும்" என்று அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் ஒரு படி மேலே போய், "உங்களது தொண்டை வழியாக கீழிறங்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் 'ஹரே கிருஷ்ணகுமார்' என்று உச்சரிக்க வேண்டும் 'ஹரே ரமா' என்று அல்ல." என்று அவர் பேசியது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், "ஒவ்வொரு நிமிடமும் வளர்ச்சியைக் கொண்டு வந்தது" தான்(கிருஷ்ண குமார்) என்றும், 'எந்தக் கடவுளும் அல்ல' என்றும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் பணியாற்ற உள்ளதாகவும், பிறர் புகார் வேண்டுமானால் அளிக்கலாம், உதவி எதிர்பார்க்க கூடாது என்றும் அவர் பேசியது வார்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்த பகுதிகளில் சேவா பாரதி அமைப்பு பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த குழாய்களை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியினர் அடித்து உடைத்தது குறிப்பிடத்தக்கது.

Similar News