'கோவில் அலுவலகங்களில் அசைவ உணவு' - சட்டசபையில் கவனத்திற்கு கொண்டு வந்த எம்.எல்.ஏ சி.கே.சரவஸ்தி - சேகர்பாபுவின் பதில் என்ன?

கோவில்களில் உள்ள அலுவலங்களில் அசைவ உணவு சாப்பிடப்படுகிறது என சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதி எழுப்பிய கேள்விக்கு 'இனி அதற்கு தடை விதிக்கப்படும்' என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-05 07:00 GMT

கோவில்களில் உள்ள அலுவலங்களில் அசைவ உணவு சாப்பிடப்படுகிறது என சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதி எழுப்பிய கேள்விக்கு 'இனி அதற்கு தடை விதிக்கப்படும்' என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பா.ஜ.க உறுப்பினர் சி.கே.சரஸ்வதி கூறியதாவது, 'கோவில்களில் உள்ள அலுவலகங்களில் அசைவ உணவு சாப்பிடப்படுகிறது இதனை அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்' என குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, 'கோவில் அலுவலகங்களில் அசைவ உணவு சாப்பிட அனுமதி இல்லை, எந்த கோவிலில் அது நடந்ததாக சொன்னால் அதற்கு தடை நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் தெரிவித்தார். எனவே இனி கோவில் அலுவலகங்களிலும் அசைவ உணவு சாப்பிடுவது தடை செய்யப்படுகிறது அப்படி மீறி யாராவது சாப்பிட்டால் அதை அறநிலையத்துறைக்கு கவனத்தில் கொண்டு வருவதாகவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Source - தினத்தந்தி

Similar News