சாதி வெறியை தூண்டும் விதமாக அரசியல் கட்சிகள் பேசக்கூடாது: சென்னை மாநகராட்சி ஆணையர்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று மாற்றி மாற்றி தங்களது கருத்துக்களை முன்வைப்பார்கள்.

Update: 2021-03-08 03:00 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று மாற்றி மாற்றி தங்களது கருத்துக்களை முன்வைப்பார்கள்.

அது போன்ற நேரத்தில் ஒருவருடைய சாதியை பற்றியும் பேசுவார்கள். இது போன்றவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேர்தல் சமயங்களில் பொது இடங்களில் சாதி வெறியை தூண்டும் விதமாக நடந்து கொள்வோர் எந்த கட்சியினராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும், சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பாடல் பாடியும் இசை கருவி இசைத்தும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என கூறினார்.

Similar News